தேடப்படும் நிராவ் மோதி இந்தியாவுக்கு கடத்தப்படலாம்

தேடப்படும் நிராவ் மோதி இந்தியாவுக்கு கடத்தப்படலாம்

இன்றைய பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இந்தியாவில் தேடப்படும் முன்னாள் வைர வியாபாரியான நிராவ் மோதி (Nirav Modi) விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம். பிரித்தானியாவில் வாழும் நிராவ் மோதி தன்னை பிரித்தானிய அரசு இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கேட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கே இன்று புதன்கிழமை நிராவின் வேண்டுகோளை மறுத்து உள்ளது.

நிராவ் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் தற்கொலை செய்யக்கூடும் என்று நீதிமன்றில் நிராவின் சட்டத்தரணியால் வாதாடப்பட்டது. ஆனால் அதற்கு பதிலளித்த நீதிபதி Jeremy Stuart-Smith நிராவ் மும்பாயில் உள்ள Arthur Road சிறைச்சாலை கைதிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வசதிகள் கொண்டது என்று கூறியுள்ளார்.

தன்னை ஒரு வைர வியாபாரியாக விளம்பரப்படுத்தி Punjab Bank உட்பட பல வங்கிகளில் பெருமளவு கடன் பெற்று பின் இந்தியாவை விட்டு தப்பி ஓடினார் நிராவ். அரசியல் புள்ளிகளும் நிராவ் வங்கிகளில் கடன் பெற உதவி இருந்தன.

நிராவ் வங்கிகளிடம் இருந்து சுமார் $2 பில்லியன் திருடியதாக இந்தியா கூறுகிறது. அவரை கத்தி செய்யும் நோக்கில் இந்தியா இன்டர்போல் (Interpol Red Notice) அறிவிப்பை செய்திருந்தது.

இன்டர்போல் அறிவிப்பு காரணமாக நிராவ் 2019ம் ஆண்டு பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார். தற்போது நிராவ் லண்டன் நகரில் உள்ள Wandsworth சிறையில் உள்ளார்.

ஒரு காலத்தில் நிராவிடம் $1.8 பில்லியன் இருந்ததாகவும், அப்போது அவர் இந்தியாவின் 85 ஆவது செல்வந்தர் என்றும் அமெரிக்காவின் Forbes கூறியிருந்தது.