வெனிசுவேலா எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் வெனிசுவேலாவுக்கு எடுத்துவரப்பட்ட உதவி பொருட்கள் வெனிசுவேலாவுள்ளே அனுமதிக்கப்படாதபோது எல்லை நகர்களில் கலவரங்கள் தோன்றி உள்ளன. இந்த கலவரங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
.
உதவி பொருட்களை எடுத்து சென்ற வாகனங்கள் சில தீயிடப்பட்டும் உள்ளன. அவற்றில் இருந்த பொருட்களை கூடி நின்ற மக்கள் மீட்டனர்.
.
அமெரிக்காவின் உதவி பொருட்களை தனது நாட்டின் ஊடு எடுத்துவர கொலம்பியா அனுமதித்தால், வெனிசுவேலா அரசு கொலம்பியாவுடனான உறவுகளை துண்டித்தும் உள்ளது.
.
வெனிசுவேலாவுக்கு உண்மையில் உதவும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருக்குமானால், அமெரிக்கா வெனிசுவேலா மீது விதித்துள்ள பொருளாதார தடையை நீக்கட்டும் என்கிறது வெனிசுவேலா அரசு. எதிர்க்கட்சி தலைவர் அமெரிக்காவின் பொம்மை என்றும் கூறுகிறது அரசு.
.
வெனிசுவேலாவுக்கும், பிரேசிலிக்கும் இடையிலான எல்லைகளிலும் கலவரங்கள் மூண்டுள்ளன. ஆனால் வெனிசுவேலாவின் ஏனைய பகுதிகள் அரசின் ஆதரவுடன் காணப்படுகின்றன. இராணுவமும் அரசுக்கே ஆதரவை வழங்குகிறது.
.
அமெரிக்காவின் Puerto Rico விலிருந்து உதவி பொருட்களுடன் சென்ற கப்பல் மீது வெனிசுவேலா இராணுவம் தாக்கும் என்று கூறியதால் அந்த கப்பல் மீண்டும் Puerto Rico திரும்பியது.
.
ரம்ப் வடகொரியாவின் கிம்மை வியட்நம்மில் சந்திக்க செல்லவிருப்பதால் அமெரிக்கா தற்போதைக்கு பாரிய நகர்வு எதையும் வெனிசுவேலாவில் செய்யாது என்றும் நம்பப்படுகிறது.
.