ரஷ்யா அண்மையில் ஏவிய செய்மதியான Kosmos 2521 மீது அமெரிக்கா சந்தேகம் கொண்டுள்ளது. அமெரிக்க State Department assistant secretary Yleem Poblete இது தொடர்பாக கருது தெரிவிக்கையில் “இது என்ன என்பதை எம்மால் உறுதியாக கூறமுடியாது” என்றுள்ளார்.
.
Kosmos 2521 செய்மதியின் நகர்வுகள் வழமைக்கு மாறாக உள்ளன என்று கூறும் அமெரிக்கா, இந்த செய்மதி எதிரி செய்மதிகளை தாக்கும் செய்மதியாக இருக்கலாம் என்று நம்புகிறது.
.
ஆனால் ரஷ்யா அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்து உள்ளது.
.
நீண்ட காலமாக அமெரிக்கா விண்வெளியில் ஆதிக்கத்தை செலுத்தி வந்திருந்தாலும், சீனாவும், ரஷ்யாவும் கூடவே மிக வேகமாக விண்வெளியை ஆக்கிரமித்து வருகின்றன.
.
2007 ஆம் ஆண்டில் சீனா கைவிடப்பட்ட தனது செய்மதி ஒன்றை நிலத்தில் இருந்து ஏவிய கணை ஒன்றால் மோதி உடைத்திருந்தது. எதிரிகளின் செய்மதிகளை தாக்குவதற்கான பயிற்சி ஒன்றாகவே இச்செயல் கருதப்பட்டது.
.
நீவீன ஏவுகணைகள், யுத்த விமானங்கள், GPS வகை வழிகாட்டிகள், சில தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பன செய்மதிகளின் உதவியுடனேயே செயல்படுகின்றன.
.