தாம் கேட்டுக்கொண்டதற்கு அமைய சீனா இதுவரை செயல்படவில்லை என்று கூறி அமெரிக்காவின் ரம்ப் அரசு இன்று சீன பொருட்கள் மீது மூன்றாம் தொகுதி இறக்குமதி வரியை (tariffs) அறிவித்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட மேலதிக வரிக்கான பதில் நடவடிக்கையை சீனா இதுவரை அறிவிக்கவில்லை.
.
இன்று அறிவித்த 10% மேலதிக வரி சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அறவிடப்படும். இன்று அறிவிக்கப்பட்ட வரி இந்த மாதம் 24ஆம் திகதி முதல் நடைமுறை செய்யப்படும்.
.
தேவைப்பட்டால் இன்று அறிவித்த 10% வரியை 25% வரியாக அதிகரிக்கவும் தாம் தயார் என்று கூறியுள்ளது ரம்ப் அரசு. அவ்வாறு 25% வரி அறவிடப்படின், அது வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
.
இவ்வாறு நடைமுறை செய்யப்படும் புதிய இறக்குமதி வரி பணத்தை செலுத்துவது அமெரிக்க மக்களே. அதனால் அவர்களின் கொள்வனவுகள் விரைவில் குறையலாம் என்று கருதப்படுகிறது.
.
அதேவேளை iPhone, iPad போன்ற Apple நிறுவன பொருட்கள் இந்த மூன்றாம் தொகுதி வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
.