​இஸ்லாமிய அமைச்சர்கள் பதவி துறப்பு

SriLanka

இலங்கையின் அனைத்து இஸ்லாமிய மதம் சார்ந்த அமைச்சர்களும், உப அமைச்சர்களும் கூடவே இரண்டு ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்துள்ளனர். தமக்கு எதிராக சில கடும்போக்கு சிங்கள அரசியல் மற்றும் பௌத்த மத தலைமைகள் கொண்டுள்ள ​வெறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே இந்த பதவி துறப்பு இடம்பெறுள்ளது.
.
அமைச்சர்களும், ஆளுநர்களும் தமது பதவிகளை துறந்தாலும், அவர்கள் தொடர்ந்தும் தமது பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருப்பார். அத்துடன் அவர்கள் ஆளும் கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பர். அதனால் ரணில் தலைமையிலான ஆட்சிக்கு தற்போது ஆபத்து இல்லை.
.
கண்டியில் கடந்த சனி முதல் சாகும்வரை உண்ணா விரதம் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ரத்ன தேரர், M. L. A. M. Hizbullah and Azath Salley ஆகிய இரண்டு இஸ்லாமிய ஆளுநர்களும் பதவி துறந்த பின் தனது சாகும்வரையான உண்ணா விரத்தை இடைநிறுத்தி கொண்டார்.
.