ஹோலிவூட்டின் சீன திரைப்படம்: The Great Wall

GreatWall

ஹோலிவூட் (Hollywood) முக்கிய பங்கு வகிக்க, சீனாவின் கலைஞர்களை உள்ளடக்கிய பிரமாண்ட திரைப்படம் ஒன்று இந்த மாதம் 16 ஆம் திகதி சீனாவில் வெளிவரவுள்ளது. சீன பெருஞ்சுவரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கற்பனை கதை ஒன்றை “The Great Wall” என ஆங்கிலத்திலும், செஆங் செங் (Chang Cheng) என்று சீன மொழியிலும் வெளியிடுகின்றனர். ஹோலிவூட்டின் பிரபல நடிகர் மாற் டேமன் (Matt Damon) உட்பட பல ஹோலிவூட் நடிகர்களும், Andy Lau உட்பட பல சீன நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
.
சீன மொழி படம் இந்த மாதம் 16 ஆம் திகதி வெளிவந்தாலும், ஆங்கில மொழி படம் வரும் பெப்ருவரி 17 ஆம் திகதியே அமெரிக்காவில் வெளிவரும்.
.
இந்த படத்துக்கு சுமார் $150 மில்லியன் செலவாகி உள்ளதாக கூறப்படுகிறது. கற்பனை பூதங்களுடன் மோதும் சண்டைகள் கொண்ட இந்த action திரைப்படமே மிக அதிக அளவில் செலவு செய்து சீனாவில் படப்பிடிப்பு செய்யப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் சீன பெருஞ்சுவரை மையமாக கொண்டிருந்தாலும், இப்படப்பிடிப்புக்காக 3 தற்காலிக பெருஞ்சுவர்கள் கட்டப்பட்டதாம். உண்மையான பெருஞ்சுவர் உள்ள பகுதி படப்பிடிப்புக்கு வசதிகள் குறைந்த இடமாகும்.
.
ரஜனியின் ‘கபாலி’ திரைப்படத்தின் மொத்த செலவு சுமார் $15 மில்லியன் மட்டுமே. அந்த வகையில் The Great Wall திரைப்படம் கபாலி திரைப்படத்தின் செலவைப்போல் 10 மடங்கு அதிக செலவு கொண்டதாகும்.
.
வெள்ளை இன Matt Damonனை புகுத்தியதன் மூலம் இப்படமும் whitewash செய்யப்பட்டு உள்ளதாக பலர் குற்றம் கூறியும் உள்ளனர். ஆபிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு போன்ற பின்னணிகளில் தயாரிக்கப்படும் படங்களில் வெள்ளை இன பாத்திரங்களை புகுத்துவதையே இவ்வாறு கூறுவார். உதாரணமாக ஆபிரிக்க காட்டில் தயாரிக்கப்பட்ட Tarzan படத்தில் எல்லா பாத்திரங்களும் கருப்பு மனிதர்களாக இருக்க, Tarzan பாத்திரம் மட்டும், பின்னணிக்கு ஒவ்வாத வகையில், வெள்ளை மனிதனாக இருக்கும். ஆனால் தயாரிப்பாளர் Matt Damon பாத்திரம் அவ்வாறு இருக்காது என்று கூறியுள்ளனர்.
.