இம்முறை அமெரிக்க சனாதிபதி தேர்தலில் ரம்ப் பெரு வெற்றி அடைந்தாலும், 2020ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் ரம்ப்/Republican தனது ஆதரவை அதிகரித்து இருக்கவில்லை. பதிலுக்கு ஹாரிஸ்/Democratic பெருமளவு ஆதரவை இழந்துள்ளார்.
2020ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பைடேன்/Democratic பெற்ற மொத்த வாக்குகள் 81,283,501. ஆனால் ஹாரிஸ்/Democratic இதுவரை பெற்ற மொத்த வாக்குகள் 69,074,145 மட்டுமே. இந்த ஆண்டின் இறுதி முடிவுகள் இதுவரை அறியப்படாவிட்டாலும் ஹாரிஸ்/Democratic சுமார் 12 மில்லியன் வாக்குகளை இழந்துள்ளார்.
2020ம் ஆண்டு தோல்வி அடைந்த ரம்ப் பெற்ற மொத்த வாக்குகள் 74,223,975. இந்த ஆண்டு வெற்றி அடைந்த ரம்ப் இதுவரை பெற்ற மொத்த வாக்குகள் 73,407,735. ரம்பின் 2020 வாக்குகளும் 2024 வாக்குகளும் ஏறக்குறைய ஒரே அளவானவையே.
காசா யுத்தமும் ஹாரிஸ்/Democratic ஆதரவை பெருமளவில் குறைய செய்துள்ளது.
இஸ்லாமியர் நிறைந்த Michigan மாநிலத்தில் 2020ம் ஆண்டு பைடென்/Democratic 2,804,040 வாக்குகளை பெற்று அந்த மாநிலத்தை வென்று இருந்தார். ஆனால் ஹாரிஸ்/Democratic இம்முறை 2,720,831 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 2020ம் ஆண்டு 2,649,852 வாக்குகள் பெற்ற ரம்ப் இந்த ஆண்டு 2,802,428 வாக்குகளை பெற்றுள்ளார். அதாவது பைடென் பெற்ற வாக்குகள் அனைத்தையும் ஹாரிஸ் இம்முறை பெற்று இருந்தால் Michigan மாநிலத்தை ஹாரிஸ் வென்று இருப்பார். இந்த மாநில electoral வாக்குகள் 16.
Pennsylvania மாநிலத்தில் 2020ம் ஆண்டு வெற்ற பைடேன் பெற்றது 3,458,229 வாக்குகள். அப்போது தோல்வி அடைந்த ரம்ப் பெற்றது 3,377,674 வாக்குகள். இந்த மாநிலத்தை இந்த ஆண்டு வென்ற ரம்ப் பெற்றது 3,485,584 வாக்குகள். ஹாரிஸ் பெற்ற வாக்குகள் 3,347,277 வாக்குகள். ஹாரிஸின் ஆதரவு 110,952 வாக்குகளால் குறைய, ரம்பின் ஆதவு 107,910 வாக்குகளால் அதிகரித்து உள்ளது. இந்த மாநில electoral வாக்குகள் 20.