கடந்த 5 மாதங்களாக ஹாங் காங் நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில காலமாக ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறி உள்ளன. வீதிகளில் கழிவுகளை குவித்தல், கல், இரும்பு போன்றவற்றை குவித்தல் போன்ற செயல்கள் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
.
ஹாங் காங் நகரில் சுமார் 10,000 சீன படைகள் நிலைகொண்டு இருந்தாலும் அவர்கள் இதுவரை ஹாங் காங் வீதிகளுக்கு வரவில்லை. ஹாங் காங் போலீசாரே நிலைமைகளை முயன்றவரை கட்டுப்படுத்தி வந்துள்ளனர்.
.
முதல் முறையாக இன்று சீன இராணுவம் வீதிகளுக்கு வந்துள்ளது. ஆனால் அவர்கள் இராணுவ உடையிலேயோ அல்லது ஆயுதங்கள் கொண்டோ வரவில்லை. பதிலாக சாதாரண உடைகளுடன் வந்த அவர்கள் ஆர்பாட்டக்காரர்கள் வீசிய தடைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
.
சீன இராணுவத்தின் இந்த நடவடிக்கை மீது சந்தேகம் கொண்டுள்ளன மேற்கு நாடுகள். இவர்களிடம் ஆயுதம் இல்லாவிடினும், அவர்களிடம் மாணவர்களை கட்டுப்படுத்தும் வல்லமை உண்டு. அத்துடன் இவர்களை மாணவர்கள் தாக்கின் சீன இராணுவம் தற்பாதுகாப்பு என்று கூறி திருப்பி தாக்கக்கூடும் அல்லது கைது செய்து ஹாங் காங் போலீசாரிடம் வழங்கக்கூடும்.
.
1997 ஆம் ஆண்டு ஹாங் காங் பிரித்தானியாவிடம் இருந்து சீனாவின் கைக்கு மாறியபின் 2018 ஆம் ஆண்டில் மட்டுமே அங்குள்ள சீன இராணுவம் ஹாங் காங் வீதிக்கு வந்திருந்தது. அப்போது அங்கு வீசிய சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீதிகளை திருத்தவே சீன இராணுவம் வந்திருந்தது.
.