ஹாங் காங் மக்களுக்கு பிரித்தானியாவின் வலுவற்ற குடியுரிமை

HongKong

அண்மையில் சீன மத்திய அரசு ஹாங் காங் பகுதியின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தை மாற்றி இருந்தது. இச்செயலை வெறுத்த பிரித்தானியா சீனாவுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் சுமார் 3 மில்லியன் ஹாங் காங் மக்களுக்கு பிரித்தானிய குடியிருமை வழங்க அறிவித்து உள்ளது.
.
உண்மையில் பிரித்தானியாவின் மேற்படி திட்டம் ஹாங் காங் வாசிகளுக்கு பெரிதும் நன்மை வழங்கப்போவது இல்லை என்று கருதப்படுகிறது.
.
முதலில் பிரித்தானியாவின் மேற்படி சலுகை சுமார் 3 மில்லியன் மக்களுக்கே பயன்படும். சுமார் 3 மில்லியன் ஹாங் காங் மக்கள் மட்டுமே BN(O) (British National – Ovevrseas) உரிமையை கொண்டுள்ளனர். அவர்கள் மட்டுமே பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
.
BN(O) உரிமை கொண்ட ஹாங் காங் மக்களும் முதலில் 5 வருடங்கள் பிரித்தானியா சென்று வாழவேண்டும். அதன் பின்னரே அவர்கள் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
.
அவ்வாறு அவர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றாலும் சீனா இரட்டை குடியிருமையை அனுமதிப்பது இல்லை. அத்துடன் மேற்படி சீனர் தமது சீன குடியுரிமையை முறைபடி கைவிடாத நிலையில், அவர்களை சீனா சீன குடிமகனாகவே கணிக்கும். அதன்படி இவர்கள் சீனா அல்லது ஹாங் காங் சென்றால் அவர்களுக்கு பிரித்தானிய தூதரகம் பாதுகாப்பு வழங்க முடியாது. அதனால் அவர்கள் ஹாங் காங், சீனா ஆகிய இடங்களுக்கு செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
.
தற்போதைய ஹாங் காங் தலைமை அதிகாரி (Chief Executive) Carrie Lam, அவரின் கணவர், இரண்டு பிள்ளைகள் எல்லோரும் BNSS (British National Selection Scheme) என்ற 1997 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட திட்டம் மூலம் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள். ஆனால் அரச சேவையில் இணைவதற்காக Carrie Lam தனது பிரித்தானிய குடியுரிமையை கைவிட்டு இருந்தார்.
.
அதேவேளை அஸ்ரேலியாவும் ஹாங் காங் வாசிகளுக்கு குடியுரிமை வழங்க முன்வந்துள்ளது. ஆனால் முழுமையான விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
.