இன்று ஹாங்காங் பகுதிக்கான விசேட ஆட்சி மன்றுள் ஆர்பாட்டக்காரர்கள் நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இவர்கள் அங்கு சேதங்களை விளைவித்தால் போலீசார் கண்ணீர் புகை குண்டு பாவனை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டி உள்ளனர்.
.
அண்மையில் ஹாங்காங் ஆட்சி சபை ஹாங்காங் சந்தேக நபர்களை சீனாவுக்கு அனுப்பக்கூடிய வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க முனைந்தது. அதை எதிர்த்தே சில ஆயிரம் ஹாங்காங் வாசிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
.
ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெற்று இருந்தாலும் பின்னர் சிலர் வன்முறையில் இறங்கினர். சிலர் அங்கு இருந்த தற்கால ஹாங்காங் இலச்சினையை அழித்து, பழைய பிரித்தானிய காலத்து கொடியையும் ஏற்றி உள்ளனர். அப்போதே போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த முனைத்துள்ளனர்.
.
ஹாங்காங் சீனாவின் அங்கம் என்றாலும், விசேட ஆட்சி அமைப்பை (Legislative Council) கொண்டது.
.