அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Mike Pompeo வும், சீனாவின் உயர் அதிகாரி Yang Jiechi யும் ஹவாயில் (Hawaii) சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இரகசியமாக திட்டமிடும் இந்த சந்திப்பு தொடர்பான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
.
கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதியின் பின் இருநாட்டு அதிகாரிகளும் எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு இருக்கவில்லை. பெப்ரவரி 7 ஆம் திகதி, மார்ச் 27 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மட்டும் அமெரிக்க சனாதிபதி ரம்பும், சீன சனாதிபதி சியும் (Xi) தொலைபேசி மூலம் உரையாடி இருந்தனர்.
.
பல ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பெரும் முறிவில் உள்ளது.
.
தற்போது அமெரிக்காவில் ரம்புக்கு ஆதரவ வீழ்ந்து உள்ளது. சில கருத்து கணிப்புக்கள் அமெரிக்காவின் Democratic கட்சி போட்டியாளர் Biden க்கு 14% அதிக ஆதரவு உள்ளதாக கூறுகின்றன. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு முன் ரம்ப் தனது ஆதரவை மீண்டும் அதிகரிக்கவில்லை என்றால் அவர் one-term சனாதிபதியாவார்.
.