ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை காங்கிரஸ் வெல்கிறது?

ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை காங்கிரஸ் வெல்கிறது?

ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று சனிக்கிழமை முடிவடைந்த மாநில தேர்தல்கள் இரண்டிலும் காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி வெற்றி அடையும் என்று கணிக்கப்படுகிறது.

வாக்களித்தோர் கூற்று (exit poll) அடிப்படையில் 90 ஆசனங்கள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் அணி 54 ஆசனங்கள் வரை பெற்று பெரும்பான்மை ஆட்சி அமைக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. பா.ஜ. கட்சி 29 ஆசனங்கள் வரை பெறலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

மொத்தம் 90 ஆசனங்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் 40 ஆசனங்கள் வரை பெறலாம் என்றும் பா.ஜ 25 ஆசங்கள் வரை பெறலாம் என்றும் கணிக்கப்படுகிறது. அதனால் இங்கு ஒரு கூட்டு ஆட்சியே இடம்பெறலாம்.

சட்டப்படியான எண்ணல் 8ம் திகதி இடம்பெறும்.