2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டிகள் இலங்கையின் ஹம்பந்தோட்டை நகரில் இடம்பெற சந்தர்ப்பங்கள் உண்டு என்று கருதப்படுகிறது.
கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில், Toronto நகருக்கு மேற்கே, அமைந்துள்ள Hamilton என்ற நகரமே 2026 Commonwealth போட்டிகளை கொண்டிருக்க விரும்பும் நகரங்களில் முன்னணியில் உள்ளது.
ஆனால் ஒன்றாரியோ மாநிலம் அதை விரும்பவில்லை. 2026 ஆம் ஆண்டு FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிகள் கனடா (Toronto), அமெரிக்கா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளதால் 2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டியையும் Toronto நகர் பகுதியில் கொண்டிருப்பது கடினம் என்றுள்ளது ஒன்றாரியோ அரசு.
போட்டியை கொண்டிருக்க விரும்பும் இரண்டாம் முன்னணி நகராக தெற்கு அஸ்ரேலிய நகரான Adelaide உள்ளது. ஆனால் அங்கும் அரசு போட்டிகளுக்கு ஆதரவு வழங்க மறுத்து உள்ளது. அதனால் வேறு ஒரு அஸ்ரேலிய நகரில் போட்டிகளை கொண்டிருக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன.
மூன்றாம் நகராக இலங்கையின் ஹம்பந்தோட்டைஉள்ளது. அதற்கான பேச்சுகளும் அரசுடன் இடம்பெறுகின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டிகளை ஹம்பந்தோட்டை கொண்டிருக்க விரும்பி இருந்தாலும், அந்த போட்டிகள் அஸ்ரேலியாவின் Gold Coast பகுதி 43 க்கு 27 வாக்கு விகிதத்தில் வென்று இருந்தது.
2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தின் Birmingham நகரில் இடம்பெறும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இப்போட்டி இந்தியாவில் இடம்பெற்று இருந்தது.
2018 ஆம் ஆண்டு 72 நாடுகளில் இருந்து 4,426 வீரர்கள் 275 போட்டிகளில் பங்கு கொண்டிருந்தனர்.