ஹமாஸ் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் செய்த தாக்குதல்களுக்கு பல வெளிநாட்டவரும் பலியாகி உள்ளனர். அவர்களின் தொகைகள் வருமாறு:
தாய்லாந்து: 12 பேர் பலி, 11 பேர் பணயம்
அமெரிக்கா: 11 பேர் பலி, மேலும் பலரை காணவில்லை
நேபாளம்: 10 பேர் பலி
அர்ஜன்டீனா: 7 பேர் பலி, 15 பேரை காணவில்லை
யுக்கிறேன்: 2 பேர் பலி
பிரான்ஸ்: 2 பேர் பலி, 14 பேரை காணவில்லை
ரஷ்யா: ஒருவர் பலி, 4 பேரை காணவில்லை
பிரித்தானியா: ஒருவர் பலி, ஒருவரை காணவில்லை
கனடா: ஒருவர் பலி, 3 பேரை காணவில்லை
கம்போடியா: ஒருவர் பலி
ஜெர்மனி: பலர் பணயம்
பிரேசில்: 3 பேரை காணவில்லை
Chile: 2 பேரை காணவில்லை
இத்தாலி: 2 பேரை காணவில்லை
Paraguay: 2 பேரை காணவில்லை
Peru: 2 பேரை காணவில்லை
தன்சனியா: 2 பேரை காணவில்லை
மெக்சிகோ: 2 பேர் பணயம்
பிலிப்பீன்: 1 பணயம், 6 பேரை காணவில்லை
பனாமா: ஒருவரை காணவில்லை
அயர்லாந்து: ஒருவரை காணவில்லை
இவர்களில் சிலர் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள காசா எல்லையோரம் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொண்டவர்.
அத்துடன் பல வெளிநாட்டவர் காசா எல்லையோரம் உள்ள ஆக்கிரமித்த நிலங்களில் யூதர் செய்யும் விவசாயங்களில் பணிபுரிய வந்தவர்கள். சிலர் முதியோயரை பராமரிக்கும் பணிக்கு வந்தவர்கள்.
இஸ்ரேலில் 30,000 பிலிப்பீன் நாட்டவரும், 30,000 தாய்லாந்து நாட்டவரும் பணி செய்கின்றனர். சுமார் 5,000 நேபாளிகள் வைத்திய துறைகளில் பணியாற்றுகின்றனர். இந்தியர் 18,000 பேரும் இஸ்ரேலில் உள்ளனர்.
பல வெளிநாட்டவர் தொழில் வாய்ப்பு தேடி இஸ்ரேல் சென்றாலும் சிலர் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் படிக்க சென்றுள்ளனர்.