ஹமாஸ் அரசியல் தலைவர் தெகிரானில் படுகொலை 

ஹமாஸ் அரசியல் தலைவர் தெகிரானில் படுகொலை 

பலஸ்தீன இயக்கமான ஹமாசின் அரசியல் தலைவர் Ismail Haniyeh புதன் அதிகாலை ஈரானின் தலைநகர் தெகிரானில் படுகொலை செய்யப்பட்டார். பொதுவாக கட்டாரில் அல்லது துருக்கியில் வாழும் இவர் ஈரானின் புதிய சனாதிபதி பதவி ஏற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தெகிரான் சென்றிருந்தார்.

இந்த படுகொலையை செய்தது இஸ்ரேல் என்று கூறப்பட்டாலும், இஸ்ரேல் குற்றச்சாட்டை ஏற்கவோ அல்லது மறுக்கவே இல்லை.

Haniyeh ஒரு guided ஏவுகணை மூலம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலைக்கு பதிலடி வழங்க ஈரானும், ஹமாசும் உறுதி கூறியுள்ளன. அதனால் மத்தியகிழக்கில் யுத்தம் நீண்டகாலம் தொடரலாம்.

கட்டார் இந்த படுகொலையை heinous crime, dangerous escalation என்று விபரித்துள்ளது. சீனா படுகொலையை கடுமையாக கண்டித்துள்ளது. துருக்கி இதை despicable act என்று கூறியுள்ளது. ரஷ்யா இதை ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் படுகொலை என்று கூறியுள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் வழமைபோல் மௌனமாக உள்ளன.

காசா அகதி முகாமில் 1962ம் ஆண்டு பிறந்த இவர் முன்னர் பலதடவைகள் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார். 2017ம் ஆண்டு இவர் ஹமாஸின் அரசியல் தலைவர் ஆனார்.

Haniyeh வின் உடல் கட்டாரில் புதைக்கப்படும் என்று கூறப்படுகிறது.