ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் கூறும் பங்களாதேஷ் 

ஹசீனாவை நாடு கடத்த இந்தியாவிடம் கூறும் பங்களாதேஷ் 

தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் முன்னாள் பங்களாதேச பிரதமர் ஹசீனாவை (Sheikh Hasina) பங்களாதேசுக்கு நாடு கடத்த பங்களாதேசம் திங்கள் சட்டப்படி கேட்டுள்ளது. இந்த அழைப்பு இந்தியாவை மேலும் சங்கடத்தில் சிக்க வைத்துள்ளது.

2013ம் ஆண்டு இந்தியாவும், பங்களாதேசும் நாடு கடத்தல் இணக்கம் ஒன்றை செய்திருந்தன. அப்போது பங்களாதேசில் ஒளிந்திருந்த பல இந்திய குற்றவாளிகளை இந்தியா எடுக்க இந்த இணக்கம் துணையாக இருந்தது.

உதாரணமாக 2015ம் ஆண்டு Anup Chetia என்ற United Liberation Front of Assam (ULFA) குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த மேற்படி இணக்கம் உதவியது. ஆனால் தற்போது நிலைமை மாறி மேற்படி இணக்கம் இந்தியாவுக்கு குந்தகமாகிறது.

இந்தியா இதுவரை மேற்படி வேண்டுகோளுக்கு பதில் எதையும் அளிக்கவில்லை.

இந்தியா ஹசீனாவை வழங்க மறுக்கலாம், ஆனால் எதிர்வரும் காலத்தில் மீண்டும் தனக்கு வேண்டிய ஒருவரை பங்களாதேசில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த நேரிட்டால் என்னாவது?