அமெரிக்காவில் புதிய சனாதிபதி பழைய சனாதிபதி காலத்தில் பணியாற்றிய சில இராணுவ civil அதிகாரிகளை மாற்றி தனக்கு விருப்பமான அதிகாரிகளை பதவியில் அமர்த்துவது சாதாரணம். ஆனால் நீண்டகால சேவையின் பின் உயர் பதவிக்கு வரும் இரானுவ அதிகாரிகளை புதிய சனாதிபதி பொதுவாக பதவி நீங்குவதில்லை.
ஆனால் ரம்ப் வெள்ளி பல இராணுவ அதிகாரிகளை பதவியில் இருந்து விரட்டியுள்ளார். Chairman of the Joint Chiefs of Staff பதவியில் இருந்த ஜெனரல் Charles Brown வெள்ளி பதவியில் இருந்து ரம்பால் விரட்டப்பட்டுள்ளார். இவர் ஒரு கருப்பு இனத்தவர். இவரின் பதவி 2027ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டியது.
இதற்கு சற்று முன் Chief of Naval Operations பதவியில் இருந்த அட்மிரல் Lisa Franchetti என்பவரும், விமான படையின் Vice Chief of Staff பதவியில் இருந்த ஜெனரல் Jim Slife என்பவரும் கூடவே பதவியில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர்.
மேலும் 4 உயர் இராணுவ அதிகாரிகள் ரம்பால் விரட்டப்பட்டு உள்ளனர்.
விரட்டப்பட்ட அதிகாரர்கள் பைடென் காலத்தில் பதவிக்கு அமர்த்தப்பட்டவர்கள்.