வேகமாக வளரும் அமெரிக்கா அழிக்க முனைந்த Huawei

வேகமாக வளரும் அமெரிக்கா அழிக்க முனைந்த Huawei

Huawei என்ற சீன தொழில்நுட்ப நிறுவனம் ஒரு காலத்தில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக வளர்ந்திருந்தது.

Huawei நிறுவனத்தின் வளர்ச்சியை ஏற்க மறுத்த அமெரிக்கா பல தடைகள் மூலம் அதை அழிக்க முனைந்தது. Huawei தயாரிப்புகள் (5G உட்பட) அமெரிக்காவில் பயன்படுத்தப்படுவதை அமெரிக்கா தடை செய்தது. தனது நப்பு நாடுகளையும் Huawei தயாரிப்புகளை தவிர்க்க அழுத்தியது அமெரிக்கா.

அத்துடன் அமெரிக்காவின் Google நிறுவனம் தனது Android OS ஐ Huawei க்கு வழங்குவதையும் தடுத்தது. அதுவரை Huawei தனது smartphone களில் Android OS ஐயே பணம் செலுத்தி பயன்படுத்தியது.

ஆனால் Huawei பின்வாங்கவில்லை. உடனைடியா Harmony OS என்ற தனது சொந்த OS ஐ தயாரிக்க முனைந்தது. 2019ம் ஆண்டு வெளிவந்த Harmony OS தற்போது 900 மில்லியன் smartphone களில் உள்ளது.

2023ம் ஆண்டின் முதல் 5 மாதங்கள் விற்பனை செய்யப்பட்ட smartphone களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் 5 மாதத்தில் Huawei 72% அதிகம் smartphone களை விற்பனை செய்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் Huawei யின் இலாபம் (net profit) 564% ஆல் அதிகரித்து $2.71 பில்லியன் ஆகியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் காலாண்டில் iPhone சீனாவின் 20% smartphone சந்தையை கொண்டிருக்க Huawei 9.3% சந்தையை மட்டுமே கொண்டிருந்தது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் சீன iPhone சந்தை 15.7% ஆக குறைய Huawei சந்தை 15.5%அதிகரித்துள்ளது.

தற்போது Huawei நிறுவனம் Electric Vehicle, AI துறைகளிலும் வளர்ச்சி அடைகிறது. அமெரிக்காவின் nVIDIA தனது முதல் போட்டியாக Huawei நிறுவனம் உள்ளது என்று கூறியுள்ளது.