அமெரிக்காவின் சனாதிபதி குடியிருக்கும் வெள்ளை மாளிகை அருகே உள்ள பாராளுமன்றத்தை ஒத்த Capitol Hill பகுதியில் இன்று வெள்ளி பிற்பகல் 1:00 மணியளவில் இடம்பெற்ற கார் தாக்குதலுக்கு ஒரு போலீசாரும், தாக்கியவரும் பலியாகி உள்ளனர்.
அங்கு காவலுக்கு இருந்த தடுப்பை நோக்கி வேகமாக வந்த கார் இரண்டு போலீசாரை மோதி உள்ளது. அந்த மோதலுக்கு ஒரு போலீசார் பலியாகி உள்ளார். காரை ஓட்டியவர் பின் காவல் தடுப்பில் தனது காரை மோதியுள்ளார். மோதலின் பின் காரை விட்டு வெளியேறிய தாக்குதல் சாரதி கத்தி ஒன்றை காட்டியபடி நகர முனைந்த பொழுது பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இரையானார்.
மரணித்த பொலிசாரினதும், தாக்கியவரினதும் அடையாள விபரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜனவரி 6ம் திகதி இடம்பெற்ற ரம்ப் ஆதரவாளர்களின் தாக்குதல்களுக்கு பின் Capitol Hill போலீசாருக்கு உதவியாக அங்கு சுமார் 2,300 National Guard படையினர் காவலில் உள்ளனர். அந்நிலையிலேயே இன்றைய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.