இந்திய பிரதமர் மோதி வெள்ளிக்கிழமை யூக்கிறேன் செல்லவுள்ளதாக இன்று திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் பயணத்தின் நோக்கம் அறிவிக்கப்படவில்லை.
மோதி அரசு இதுவரை ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை கண்டிக்கவில்லை. அத்துடன் மேற்கின் தடைகளையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெருமளவு எரிபொருளை மலிவு விலையில் கொள்வனவு செய்கிறது.
ஜூலை மாதம் மோதி ரஷ்யா சென்று பூட்டினை சந்தித்ததை யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி கடுமையாக சாடியிருந்தார்.