வெள்ளி மாலை இலங்கை வரும் இந்திய பிரதமர் மோதி

வெள்ளி மாலை இலங்கை வரும் இந்திய பிரதமர் மோதி

இன்று வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் மோதி இலங்கை வருகிறார். இவர் இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார். இவரின் இலங்கை பயணத்தின் உள்நோக்கம் இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும், எரிபொருள் ஒப்பந்தங்களையும் செய்வதே.

திருகோணமலையில் கைத்தொழில் நிலையங்கள், இலங்கையின் பயன்பாட்டுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய அமைப்பது தொடர்பாகவும் மோதியும், அனுரவும் உரையாடுவார்.

இந்தியா இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அது சீனா அம்பாந்தோட்டையில் $3.2 பில்லியன் செலவில் அமைக்கும் Sinopec சுத்திகரிப்பு நிலையத்துடன் போட்டியிட தள்ளப்படும்.

மோதி இலங்கையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றுக்கான அடிக்கல் பதிக்கும் நிகழ்வு  ஒன்றிலும் பங்குகொள்வார்.

வியாழன் தாய்லாந்தில் இடம்பெறும் BINSTEC நிகழ்வுக்கு சென்ற மோதி அங்கிருந்தே நேரடியாக இலங்கை வருகிறார்.