இலங்கை அரசு தனது கடனை அடைக்க கொண்டுள்ள புதிய திட்டத்தை கடன் வழங்கியோருக்கு வரும் வெள்ளிக்கிழமை விபரிக்க உள்ளது. IMF அமைப்பிடம் இருந்து மேலதிக கடன் பெற மேற்படி செயற்பாடு அவசியம்.
இந்த அமர்வை Clifford Chance என்ற வெளிநாட்டு நிறுவனம் நடைமுறை செய்யும். இந்த நிறுவனத்தின் சேவையை IMF விருப்பத்துக்கு ஏற்ப இலங்கை பெற்று இருந்தது.
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் இந்த அமர்வில் பங்குகொண்டு தமது கேள்விகளை கேட்டு, திட்டத்தை ஆராய்ந்து அது தமக்கு தகுமா என்பதை அறிந்து கொள்ளலாம். சீனா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளை இந்த திட்டத்துக்கு இணங்க வைப்பது இலங்கையின் பிரதான காரியமாக இருக்கும்.
ஆட்சியாளரின் திருட்டுகள், அதற்கு வழி சமைக்க செய்த தேவையற்ற பெரும் திட்டங்கள், பின் வந்த COVID ஒன்றாக இணைந்து இலங்கையை முறிய செய்திருந்தது. முன்னர் இலங்கைக்கு உள்ள மொத்த கடன் $52 பில்லியன் மட்டுமே என்று கூறப்பட்டு இருந்தாலும், தற்போது மொத்த கடன் $85 பில்லியன் முதல் $100 பில்லியன் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சில உண்மை வெள்ளி தெரிய வரலாம்.
இந்த அமர்வு நலமாக முடிந்தாலும் IMF சுமார் $2.9 பில்லியன் கடனை வரும் 4 ஆண்டுகளில் வழங்கும். இலங்கையின் பெரும் கடன் தொல்லையை இது தீர்க்காது. பதிலாக உல்லாச பயணம் மூலமான பணம், மத்தியகிழக்கு பணம், ஏற்றுமதி மூலமான பணம் ஆகியன மீண்டும் அதிகரித்தால் இலங்கையின் கடன் மெல்ல குறையும்.
இறக்குமதி குறைவதும் இருப்பை அதிகரிக்க உதவும்.