2023ம் ஆண்டு இந்தியர்கள் மத்தியகிழக்கு போன்ற வெளிநாடுகளுக்கு சென்று ஊழியம் செய்து இந்தியாவுக்கு அனுப்பிய (remittance) பணம் $120 பில்லியன் ஆகியுள்ளது. இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பால் அதிகம் பணம் பெற்ற நாடு இந்தியா என்கிறது உலக வங்கி.
இரண்டாம் இடத்தில் $66 பில்லியன் பெற்று மெக்சிக்கோவும், மூன்றாம் இடத்தில் $50 பில்லியன் பெற்ற சீனாவும், நாலாம் இடத்தில் $39 பில்லியன் பெற்ற பிலிப்பீனும், ஐந்தாம் இடத்தில் $27 பில்லியன் பெற்ற பாகிஸ்தானும் உள்ளன.
அமெரிக்காவின் சீன விரோத கொள்கையால் சீனருக்கு பதிலாக பெருமளவு இந்தியர் அமெரிக்கா சென்று தொழில் செய்வதும் இந்தியா அதிகரித்த பணத்தை பெற காரணமாகி உள்ளது.
2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா பெற்ற பணம் 7.5% ஆல் அதிகரிக்க, பாகிஸ்தான் பெற்ற பணம் 12% ஆல் குறைந்து உள்ளது.
உலக வங்கியின் கணிப்பின்படி இந்த ஆண்டு இந்தியாவின் வெளிநாட்டு ஊழிய வருமானம் $124 பில்லியன் ஆகவும், அடுத்த ஆண்டு $129 பில்லியன் ஆகவும் இருக்கும்.
இலங்கைக்கு 2023ம் ஆண்டில் $5.97 பில்லியன் கிடைத்துள்ளது. ரணில் ஆட்சி காலத்தில், COVID ஓய்ந்ததால், இலங்கைக்கு கிடைத்தது இந்த வருமானமும், உல்லாச பயணிகள் வழங்கும் வருமானமும் மட்டுமே. இவற்றை ரணில் தனது பலமாக காட்டுவது சில்லறை அரசியல் மட்டுமே.