வெளிநாட்டவர் சீன சிறுவர்களை தத்தெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வேகமாக குறைந்துவரும் பிறப்பு எண்ணிக்கையே இந்த தீர்மானத்துக்கு பிரதான காரணம்.
இந்த தீர்மானத்தை சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Mao Ning வியாழன் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9.02 மில்லியன் மட்டுமே.
ஆனாலும் குழந்தையுடன் இரத்த உறவு கொண்ட வெளிநாட்டவர் தொடர்ந்தும் தத்து எடுக்க அனுமதிக்கப்படுவர்.
கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 150,000 சீன சிறுவர்கள் வெளிநாட்டவரால் தத்து எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 82,000 பேர் அமெரிக்கரால் தத்து எடுக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு செலவுகள் காரணமாக சீனாவில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க குறைந்தது $50,000 செலவாகும். அத்துடன் குழந்தை வீட்டுக்கு வர 1 முதல் 2 ஆண்டுகளும் தேவைப்படும்.