வெனேசுஏலாவில் தோல்வி அடையும் அமெரிக்க கொள்கை

வெனேசுஏலாவில் தோல்வி அடையும் அமெரிக்க கொள்கை

தனக்கு அடிபணியாத நாடுகளை முன் பின் யோசனை செய்யாது தடை செய்து முரண்படும் குணம் கொண்டது அமெரிக்கா. இந்த குணத்தால் பல நாடுகளை பல்வேறு காரணங்களுக்காக பகைத்தது அமெரிக்கா. ஈரான், வட கொரியா, சிரியா, வெனேசுஏலா (Venezuela) போன்ற பல நாடுகள் இந்த பட்டியலில் அடங்கும்.

ஏற்கனவே சிரியாவில் சனாதிபதி அசாத்தை கலைக்கும் அமெரிக்காவின் முயற்சி கைவிடப்பட்டு உள்ளது. ரஷ்யா அங்கு நுழைந்து அசாத் அரசை காப்பாற்றி உள்ளது.

இந்நிலையில் வெனேசுஏலாவிலும் அமெரிக்கா கொண்ட கொள்கைகள் தற்போது தோல்வி அடைகின்றன.

அங்கு ஆட்சியில் இருந்த Nicolas Maduro தலைமையிலான இடதுசாரி அரசில் வெறுப்பை கொண்ட அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக வெனேசுஏலா மீது பெரும் தடைகளை விதித்து இருந்தது. அதன் எண்ணெய் விற்பனையையும் தடுத்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு யூக்கிறேன் யுத்தத்தால் ரஷ்ய எண்ணெய் தடைப்பட்ட அமெரிக்கா மேலதிக எண்ணெய்க்கு முதலில் சவுதியின் உதவியை நாடியது.

சவுதியின் உதவி கைகூடாத நிலையில், அமெரிக்கா மீண்டும் வெனேசுஏலா எண்ணெய்யை பெறும் நோக்கில் அதன் மீதான தடைகளை தளர்த்தி வருகிறது. தற்போது Caribbean Voyager, UACC Eagle ஆகிய இரண்டு அமெரிக்க எண்ணெய் கப்பல்கள் வெனேசுஏலா நோக்கி செல்கின்றன.

அதேவேளை அமெரிக்காவின் ஆதரவுடன் நாடு கடந்த இடைக்கால அரசு போல இயங்கிய எதிர் கட்சிகளின் கூட்டணியும் தற்போது உடைகிறது. இந்த அணியின் தலைவராக Juan Guaido என்றவரை அமர்த்தி அவரையே நாடு கடந்த இடைக்கால சனாதிபதியாக பதிவியிலும் அமர்த்தியது அமெரிக்கா. அனால் இந்த கூட்டணியில் இருந்த 4 காட்சிகளில் 3 காட்சிகள் நாடு கடந்த சனாதிபதி பதவியை வெள்ளிக்கிழமை கைவிட்டு உள்ளன. இதனால் அமெரிக்க ஆதரவுடன் நாடு கடந்த இடைக்கால சனாதிபதி பதிவில் இருந்தவர் பதவி நீக்கம் செய்யப்பட்டும் உள்ளார்.

2020ம் ஆண்டு வெனேசுஏலாவில் இராணுவ சதி செய்யும் நோக்கில் சென்ற முன்னாள் அமெரிக்க படையினர் சிலர் (Silvercorp USA என்ற அமைப்பு) வெனேசுஏலா இராணுவத்திடம் அகப்பட்டு தற்போதும் வெனேசுஏலா சிறையில் உள்ளனர். இவர்கள் அகப்பட்ட உடனே CIA தனக்கும் இந்த குழுவுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தது.

சில தினங்களுக்கு முன் போதை கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைத்திருந்த Nicolas Maduro வின் குடும்பத்தினரையும் அமெரிக்கா விடுதலை செய்துள்ளது.