வூஹான் மீண்டும் வழமைக்கு, 100 விமானங்கள் வெளியேறின

WuHan

கொரோனா வரைஸ் பரவ ஆரம்பித்த சீன நகரமான 11 மில்லியன் மக்களை கொண்ட வூஹான் (WuHan) இன்று புதன்கிழமை, 76 நாட்களின் பின், முழுமையாக வழமைக்கு திரும்பியது. ஜனவரி 23 ஆம் திகதி முதல் ஊரடங்கு போல் முடக்கி வைக்கப்பட்டு இருந்த வூஹான் மக்கள் இன்று தடைகள் எதுவும் இன்றி நடமாட விடப்பட்டனர்.
.
தடைகள் நீக்கப்பட்ட முதல் நாளே 55,000 பேர் ரயில்கள் மூலம் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பல தூர இடங்களுக்கு பயணித்து உள்ளனர். அதேவேளை முதல் தடவையாக 100 பயணிகள் விமானங்களும் இந்த நகரில் இருந்து பயணித்து உள்ளன. இந்த விமானங்கள் சீனாவுக்கு உள்ளே உள்ள நகரங்களுக்கே சென்றுள்ளன. வெளிநாடுகளுக்கான பயணிகள் விமான சேவை நீக்கப்படவில்லை.
.
முதல் ரயில் தெற்கே, காங் ஹாங் நகருக்கு அருகே, உள்ள Guangzhou நகரை நோக்கி புதன் அதிகாலை 12:50 மணிக்கு பயணித்தது. இன்று இங்கிருந்து பயணித்த China Southern விமான சேவையின் விமானங்கள் மட்டும் 28.
.
கடந்த 76 நாட்களாக இந்த நகரத்துக்கும் வெளி இடங்களுக்கும் இடையிலான வீதி, ரயில், விமான சேவைகள் மூடப்பட்டு இருந்தன. வீதிகள் மட்டும் 75 இடங்களில் மறிக்கப்பட்டு இருந்தன.
.
அதேவேளை கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாதோர் மீண்டும் வரைஸ் பரவ காரணமாகலாம் என்றும் கருதப்படுகிறது.
.