இந்தியாவில் இடம்பெறும் வீதி விபத்துகளுக்கு கடந்த வருடம் 146,133 பேர் பலியாகி உள்ளதாக இந்திய போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 400 பேர் வீதி விபத்துகளுக்கு பலியாகின்றனர். 2014 ஆம் ஆண்டில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 139,671.
.
.
அதேவேளை 2015 இல் காயப்பட்டோர் தொகை 501,423 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் அத்தொகை 489,400 ஆகவும் இருந்துள்ளன.
.
மரணித்தோரில் 80% தொகையினர் தமிழ் நாடு, மகாராஷ்டிர, மதிய பிரதேசம், கர்நாடகம், கேரளா, உத்தர பிரதேசம் உட்பட்ட 13 மாநிலங்களை சார்ந்தோர் ஆவர்.
.
.
சாரதிகள் அளவுக்கு அதிக வேகத்தில் சென்று பின் கட்டுப்பாட்டை இழப்பதே விபத்துகளின் முதல் காரணியாக உள்ளது.
.
.
அதேவேளை அமெரிக்க வீதி விபத்துக்களுக்கு 2015 ஆம் ஆண்டில் 38,300 பேர் பலியாகி இருந்துள்ளனர்.
.