அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கும், ரஷ்ய சனாதிபதி பூட்டினுக்கும் இடையிலான இன்றைய மாநாடு எதிர்பார்த்திலும் விரைவாக முடிந்துள்ளது. மொத்தம் 5 மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டாலும், மாநாடு 4 மணித்தியாலங்களுள் நிறைவு பெற்றது.
இருதரப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அணுவாயுத யுத்தம் வெற்றியை அளிக்காது என்றும், அணுவாயுத யுத்தம் நிகழக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இரு தரப்பும் தமது தூதுவர்களை மீண்டும் செயற்பட வைக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்றைய பல விசயங்களில் தீர்மானங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை அறியப்படவில்லை.
விசனம் கொண்ட பைடென் ஒருகணம் CNN நிருபர் ஒருவர் மீதும் கோபப்பட்டு இருந்தார். ஆனால் பின்னர் அந்த நிருபரிடம் பைடென் மன்னிப்பு கூறியிருந்தார்.
Cyber attacks, மனித உரிமைகள், தேர்தலில் குளறுபடி செய்வது (election meddling), Crimea குடா, யுகிரைன் கிளர்ச்சி, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரான Alexie Navalny ஆகிய பல விசயங்கள் பைடெனால் முன்வைக்கப்பட்டு இருந்தன. அவை எதிலும் இணக்கம் ஏற்படவில்லை. Navalny விசயம் உள்நாட்டு விசயம் என்று பூட்டின் முற்றாக நிராகரித்துள்ளார்.