இதுவரை காலம் பெரும்பாலான மற்றைய நாட்டு பிரசைகள் சீனாவுக்குள் நுழைய விரும்பின் நுழைவதற்கு முன்னரே அனுமதி (visa) பெற்றிருத்தல் வேண்டும். இந்த முறைமையில் இப்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது 45 நாடுகளின் பிரசைகள் 72 மணித்தியாலங்கள் விசா இன்றி பெய்ஜிங் (Beijing) மற்றும் சங்காய் (Shanghai) ஆகிய இரு நகர விமானநிலையங்கள் மூலம் நுழையலாம்.
அந்த நாடுகள் பின்வருமாறு: Argentina, Austria, Australia, Belgium, Brazil, Brunei, Bulgaria, Canada, Chile, Cyprus, Czech Republic, Denmark, Estonia, Finland, France, Germany, Greece, Hungary, Iceland, Ireland, Italy, Japan, Latvia, Lithuania, Luxembourg, Malta, Mexico, Netherlands, New Zealand, Poland, Portugal, Qatar, Romania, Russia, Singapore, Slovakia, Slovenia, South Korea, Spain, Sweden, Switzerland, United Arab Emirates, Ukraine, United Kingdom, United States.
இவ்வாறு செய்வதன் மூலம் சீனாவின் விமான சேவை நிறுவங்கள் பாரிய நன்மை அடையும். இந்த இலவச transit visa சீனாவின் விமான சேவை நிறுவங்கள் மற்றைய நாட்டு பிரசைகளுக்கும் தூரதேச விமான சேவை வழங்க வசதியாக அமையும். குறிப்பாக ஆசிய-ஐரோப்பா மற்றும் ஆசியா-வட அமெரிக்கா பயணிகளுக்கு சேவை செய்ய சீனாவின் விமானசேவை நிறுவங்கள் முன்வரும். இது பல வேறுநாட்டு விமான சேவைகளுக்கும் பலத்த போட்டியை உருவாக்கும்.
விமான சேவை நிறுவங்கள் மட்டுமன்றி இந்த நரங்களில் உள்ள ஹோட்டல்கள், விற்பனை நிலையங்கள் போன்றனவும் அதிக வாடிக்கையாளரை எதிர்பார்க்கலாம். இந்த நரங்களில் உள்ள உல்லாச பயணிகள் சேவை நிறுவங்கள் 1-நாள், 2-நாள், 3-நாள் சுற்றுலா சேவைகளை வழங்க தொடங்கியுள்ளனர்.
சீனாவின் இந்த நடவைக்கை சிங்கபூர், கொங் ஹோங் (Hong Kong) போன்ற இடங்களுக்கு புதிய போட்டியாக அமையும்.