விடுதலையாகும் 80% பலஸ்தீனர் குற்றச்சாட்டு அற்றவர்கள்

விடுதலையாகும் 80% பலஸ்தீனர் குற்றச்சாட்டு அற்றவர்கள்

வழமையாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் கண்மூடித்தனமான இஸ்ரேல் ஆதரவு கொண்டவை. இஸ்ரேலுடன் மோதும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற ஆயுத குழுக்களை terrorist என்று கூறும் இந்த செய்தி நிறுவனங்கள் Free Syrian Army, PKK போன்ற மேற்கின் ஆதரவில் இயங்கும் ஆயுத குழுக்களை terrorist என்று அழைப்பதில்லை.

தற்காலங்களில் இணையம் செய்தி நிறுவனங்களுக்கு அப்பால் உண்மைகளை பகிரங்கம் செய்வதால் அமெரிக்க செய்தி நிறுவனங்களும் உண்மைகளை கூற தள்ளப்பட்டுள்ளன.

வழமையாக இஸ்ரேல் பக்கம் சாய்த்து செய்திகளை வெளியிடும் CNN என்ற அமெரிக்க செய்தி நிறுவனம் இன்று பதிந்த செய்தி ஒன்றில் தற்போது விடுதலையாகும் பலஸ்தீனரில் 80% மானோர் எந்தவித குற்றச்சாட்டுகளும் தாக்கல் செய்யப்படாது இஸ்ரேலின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தோர் என்று கணித்து கூறியுள்ளது.

CNN நிறுவனத்தின் Nima Elbagir தயாரித்த செய்தியில் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட Malak Salman என்ற பெண் அவரின் 16ம் வயதில் attempted murder குற்றத்தில் இஸ்ரேல் சிறையில் 10 ஆண்டு தண்டனையில் இருந்தவர் என்று அறிந்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தில் எவரும் காயப்படவில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது என்கிறார் CNN நிருபர்.

விடுதலை செய்யப்பட Fatima Shahin என்ற பெண்ணும் attempted murder குற்றச்சாட்டில் சிறையில் இருந்தவர். ஆனால் அவர் மீதும் இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. இவரை இஸ்ரேல் இராணுவம் சுட்டதால் இவர் தற்போது wheelchair மூலம் நடமாடுகிறார்.

அது மட்டுமன்றி விடுதலையன பலஸ்தீனர் குடும்பங்கள் விடுதலையை கொண்டாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் Salman வீட்டில் விடுதலையை கொண்டாட இருந்த அலங்காரங்களை அகற்றி உள்ளது.

விடுதலையாகும் பலஸ்தீனர் வீடுகளில் செய்தி நிறுவனத்தினர்களும் வெளியேற்றப்படுகின்றனர் என்கிறது CNN செய்தி.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனர் இடங்களில் இஸ்ரேல் இராணுவத்தின் சட்டத்தின்கீழும், யூதர்கள் பொதுசன சட்டத்தின் கீழும் விசாரிக்கப்படுவார்.

https://edition.cnn.com/videos/world/2023/11/27/palestinian-prisoners-released-celebrations-israel-official-ben-gvir-nima-elbagir-lead-dnt-vpx.cnn