வாழ்க்கை செலவு மிகையாக அதிகரித்த காரணத்தால் வாழ கட்டுப்படியாகாத முதல் 10 நகரங்கள் அட்டவணை செய்யப்பட்டு உள்ளன. உலகின் முதலாவது வாழ்க்கை செலவு அதிகரித்த நகரமாக ஹாங் காங் உள்ளது.
இதில் 5 நகரங்கள் அமெரிக்காவிலும், 3 நகரங்கள் அஸ்ரேலியாவிலும், 2 நகரங்கள் கனடாவிலும் உள்ளன.
கலிபோர்னியாவில் உள்ள Center for Demographics and Policy at Chapman University ஆய்வாளர்களும் கனடாவின் Frontier Center for Public ஆய்வாளர்களும் இணைந்து செய்த ஆய்வின்படி வாழ கட்டுப்படியாகாத உலகின் முதல் 10 நகரங்கள் வருமாறு:
1. Hong Kong (China)
2. Sydney (Australia)
3. Vancouver (Canada)
4. San Jose (USA)
5. Los Angeles (USA)
6. Honolulu (Hawaii, USA)
7. Melbourne (Australia)
8. San Francisco (USA), Adelaide (Australia)
9. San Diego (USA)
10. Toronto (Canada)
இந்த நகரங்களில் குடியிருப்பு (வீட்டு வாடகை அல்லது மாத கட்டுமான) செலவு மிகையாக உள்ளமையே வாழ்க்கை செலவு அதிகரிக்க பிரதான காரணமாக உள்ளது.
இந்த ஆய்வுக்கு 8 நாடுகளில் உள்ள 94 நகரங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தன.