வாலிபரின் digital media பாவனை 9 மணித்தியாலங்கள்

DigitalMedia

அமெரிக்காவில் அண்மையில் நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்று, அமெரிக்க வாலிபர் (teen) நாள் ஒன்றில் சுமார் 9 மணித்தியாலங்களை Internet பாவித்தல், social media பாவித்தல், video game விளையாடுதல், digital video பார்த்தல் போன்ற செயல்களில் செலவிடுவதாக கண்டுள்ளது. Common Sense Media என்ற அமைப்பு நடாத்திய இந்த கணிப்பில் 8 முதல் 12 வயதானோர் நாள் ஒன்றில் 6 மணித்தியாலங்கள் digital mediaவில்  செலவிடுவதாகவும் கண்டுள்ளது.
.
அத்துடன் பணக்கார வீட்டு பிள்ளைகளை விட, குறைந்த வருமானம் உடைய வீட்டு பிள்ளைகளே அதிகம் digital media வில் நேரத்தை செவல்விடுகிரார்கள் என்றும் இந்த கணிப்பு கண்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் ஆபிரிக்க வாலிபர் 11 மணித்தியாலங்கள் 10 நிமிடங்கள் digital media களில் நேரத்தை செலவிடுகின்றனர்.
.

சுமார் 50% குறைந்த வருமானம் உள்ள வீட்டு வாலிபரும், 78% செல்வந்த வீட்டு வாலிபரும் smart-phone வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
.
இந்த கணிப்புக்கு 2600 வாலிபர்களும் சிறுவயதினரும் பயன்படுத்தப்பட்டு இருந்தனர்.
.