இன்று வியாழன் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் கடும் வாய் சண்டைகளுடன் ஆரம்பமாகின. ரம்ப் காலத்தில் முறிந்துபோன அமெரிக்க-சீன உறவை புதுப்பிக்கும் நோக்கிலேயே இந்த பேச்சுக்கள் திட்டமிடப்பட்டு இருந்தன. ஆனால் ஆரம்ப பேச்சுகளே ஒருவரை மற்றவர் குற்றம் கூறும் களமாகியது.
அமெரிக்கா ஹாங் காங், தாய்வான், Xinjiang நிலவரங்கள் தொடர்பாக சீனாவை குற்றம் சாட, சீனா பதிலுக்கு அமெரிக்காவின் கருப்பு இனத்தவர் குறைபாடுகள் போன்ற குறைபாடுகளை சாடியது. அத்துடன் அமெரிக்கா தனது பண மற்றும் இராணுவ பலத்தை பயன்படுத்தி மற்றைய நாடுகளை இஞ்சித்து வருவதாகவும் சீனா சாடியது.
இன்றைய பாதகமான ஆரம்பம் பேச்சுக்களை பயனற்றதாக மாற்ற சாத்தியங்கள் உண்டு. Anchorage நகரில் இடம்பெறும் இது இரண்டு தின பேச்சுவார்தையே. இரு தரப்பும் இணைத்து உணவு உண்பதற்கான திட்டமும் இதுவரை இல்லை.
சீனா விரைவில் ரஷ்யாவுடனும் இவ்வகை மாநாடு ஒன்றை செய்யவுள்ளது. அதில் சீனாவும், ரஷ்யாவும் இணைந்து அமெரிக்காவுக்கு பதிலாக அணியை உருவாக்க முனையலாம். இது அமெரிக்கா இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து அமைக்கும் அணியை ஒத்ததாக இருக்கும்.