Zheng Shuang என்ற பிரபல சீன நடிகை (வயது 29) தனக்கும், Zhang Heng (வயது 30) என்ற தயாரிப்பாளருக்கும் அமெரிக்காவில் இரண்டு வாடகை தாய்மார்கள் மூலம் (surrogacy) பெற்ற இரண்டு குழந்தைகளையும் கைவிட்டுள்ளார். இந்த நடிகையின் செயல் சீனாவில் அவர்மீது எதிர்ப்பை உருவாகியுள்ளது
திருமணமாகாதா நடிகை Zheng தயாரிப்பாளர் Zhang உடனான உறவை முறித்துக்கொண்டதே குழந்தைகளை கைவிட காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள தந்தை Zhang உடன் வாழ்கின்றன.
ஆண் குழந்தை 2019/12/19 அன்று Colorado மாநிலத்திலும், பெண் குழந்தை 2020/01/04 அன்று Nevada மாநிலத்திலும் பிறந்து உள்ளன. குழந்தைகளின் பிறப்பு சான்றிதல்களில் Zheng Shuang என்ற பெயரே தாயின் பெயராக பதியப்பட்டு உள்ளன.
வாடகை தாயை கொள்வது (surrogacy) சீனாவில் சட்டத்துக்கு முரணானது. குழந்தைகளை கைவிடுவதும் சட்டத்துக்கு முரணானது.
இந்த நடிகையை தனது விளம்பரங்களுக்கு பயன்படுத்திய ஆடம்பர பொருட்களை தயாரிக்கும் Prada Group என்ற நிறுவனம் மேற்படி நடிகையுடனான தொடர்புகளை துண்டித்து உள்ளது. மற்றைய நிறுவனங்களும் நடிகையை கைவிட ஆரம்பித்து உள்ளன.