தான் சட்டவிரோதமாக வளர்த்த முதலைக்கு பலியாகி உள்ளார் இந்தோனேசிய ஆராச்சியாளர். இந்தோனேசியாவின் Sulawesi என்ற இடத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
.
Deasy Tuwo என்ற 44 வயதுடைய பெண் ஆராச்சியாளர் சுமார் 4.4 மீட்டர் (14.4 அடி) நீளம் கொண்ட இந்த முதலையை சட்டவிரோதமாக வளர்த்து வந்துள்ளார். அந்த முதலைக்கு இவர் தற்போது பலியாகி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவர் முதலையின் இருப்பிடத்துள் தவறி வீழ்ந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
இவரின் கை, உடல் பகுதியின் என்பன துண்டாடப்பட்டு உள்ளன. இப்பகுதிகள் முதலையின் வயிற்றுள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
.
பலியானவர் அப்பகுதியில் உள்ள pearl farm ஒன்றில் உள்ள ஆய்வுகூடத்தின் தலைமை ஆய்வாளர் ஆவார்.
.
2016 ஆம் ஆண்டில் ரஷ்ய நாட்டவர் ஒருவரும் இப்பகுதி முதலை ஒன்றுக்கு பலியாகி இருந்தார்.
.