அமெரிக்காவின் hedge fund managers உழைக்கும் மொத்த ஒதியம் தொடர்பில் New York Times பத்திரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின்படி hedge fund managers வருடம் ஒன்றில் பில்லியன் டொலர் வரை உழைக்கிறார்களாம்.
.
.
உதாரணமாக அமெரிக்காவின் JPMorgan Chase வங்கியின் CEO 2015 ஆம் ஆண்டில் $25 மில்லியன் ($25,000,000) மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் hedge fund manager Kenneth C. Griffin னின் 2015 ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானம் $1.7 பில்லியன் (1,700,000,000) என்கிறது அந்த கட்டுரை.
.
.
அமெரிக்காவின் முதல் 25 hedge fund managers மொத்தம் $12.94 பில்லியனை 2015 ஆம் ஆண்டில் வருமானமாக பெற்றுளார்கள்.
.
.
2001 ஆம் ஆண்டில் hedge fund managers மொத்தம் $539 பில்லியன் சொத்தை கையாட்டு உள்ளனர். ஆனால் தற்போது அத்தொகை $2.9 ட்ரில்லியன் (2,900 பில்லியன்) ஆக உயர்ந்துள்ளது.
.
.
Kenneth C. Griffin கடந்த வருடம் $500 மில்லியன் வழங்கி இரண்டு ஓவியங்களை ஏலத்தில் கொள்வனவு செய்திருந்தார். அத்துடன் $200 மில்லியனுக்கு New York நகரில் உள்ள luxury condo ஒன்றின் பல தட்டுக்களை கொள்வனவு செய்திருந்தார்.
.