வட கொரிய கிம் ரஷ்யா பணிக்கிறார்?

வட கொரிய கிம் ரஷ்யா பணிக்கிறார்?

வட கொரியாவின் தலைவர் கிம் (Kim Jong Un) ரஷ்யா நோக்கி பயணிப்பதாக செய்திகள் கூறுகின்றன. கிம் ரஷ்ய சனாதிபதி பூட்டினை சந்திப்பார் என்று இன்று திங்கள் ரஷ்யா கூறியுள்ளது. சந்திப்பு நாளை செவ்வாயும் இடம்பெறலாம்.

கிம் தனது ரயில் மூலமே பயணிப்பதாக கூறப்படுகிறது. கிம் பொதுவாக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ரயில் மூலமே நீண்ட தூரங்கள் பயணிப்பார்.

பூட்டின் ரஷ்யாவின் கிழக்கு நகரமான Vladivostok இன்று திங்கள் சென்றுள்ளார். சந்திப்பு இந்த நகரத்தில் இடம்பெறலாம்.

ரஷ்யாவின் யுக்கிறேன் மீதான யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்கள் வட கொரியா வழங்க வழி செய்வதே இந்த கிம்-பூட்டின் சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

பதிலுக்கு வட கொரியா ரஷ்யாவிடம் இருந்து புதிய ஆயுத தொழிநுட்பங்களையும் பெறக்கூடும்.

கிம் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் வழங்கினால் கிம் will pay a price என்று அமெரிக்கா ஏற்கனவே கிம்மை மிரட்டி உள்ளது.