வட கொரியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட ballistic ஏவுகணைகளை ரஷ்யா யுக்கிறேன் மீது ஏவியுள்ளது என்று அமெரிக்கா கூறுகிறது.
இவை வட கொரியா தயாரிக்கும் Hwasong-11 குடும்ப KN-23 மற்றும் KN-25 வகை ஏவுகணைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை சுமார் 900 km தூரம் சென்று தாக்க வல்லன.
திண்ம நிலை எரிபொருளை (solid-state propellant) பயன்படுத்தும் இந்த வகை ஏவுகணைகளை வட கொரியா 2019 ஆண்டே பரிசோதனை செய்திருந்தது. திரவ நிலை எரிபொருளை பயன்படுத்தும் ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில் இவை யுத்த முனையில் கையாள்வதற்கு பாதுகாப்பானவை.
இதனால் ஆவேசம் கொண்டுள்ளது அமெரிக்கா.