வடமேற்கு ஆளுநர் வசந்த கரன்னகொட மீது அமெரிக்கா தடை

வடமேற்கு ஆளுநர் வசந்த கரன்னகொட மீது அமெரிக்கா தடை

இலங்கையின் வடமேற்கு மாநில ஆளுநரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரன்னகொட (Wasantha Karannagoda) மீதும் அவரின் மனைவி (Srimathi Ashoka Karannagoda) மீதும் அமெரிக்கா நேற்று (ஏப்ரல் 26) தடை விதித்து உள்ளது.

அமெரிக்க வெளியுறவு சட்ட பிரிவான 7031(c) க்கு அமையவே இந்த தடை நடைமுறை செய்யப்பட்டுள்ளது. வசந்த கடற்படை தளபதியாக இருந்த காலத்தில் செய்த மனித உரிமைகள் மீறல்களே தடைக்கு காரணமாகிறது.

தடை காரணமாக வசந்தவும், மனைவியும் அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வசந்த செல்வந்த குடும்பத்து இளம் வயதினரை கடத்தி பின் விடுதலை செய்ய பணம் பெற்று இருந்ததாக சில விசாரணைகள் குற்றம் சாட்டி இருந்தன. அந்த குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா முழுமையாக நம்புகிறது.

வசந்த மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை அரசால் 2021ம் ஆண்டு கைவிடப்பட, கோத்தபாய இவரை வடமேற்கு மாநில ஆளுநர் ஆக நியமித்து இருந்தார்.