வடகொரிய தூதரக தாக்குதல் பின்னணியில் CIA?

NorthKoreaTest

கடந்த பெப்ருவரி மாதம் 22 ஆம் திகதி ஸ்பெயின் (Spain) நாட்டில் உள்ள வடகொரிய தூதுவரகம் மீது இனம் தெரியாத சுமார் 10 பேர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி இருந்தது. தரமான திட்டத்துடன் துப்பாக்கிகள், கத்திகள் கொண்டு அரங்கேற்றிய இந்த தாக்குதலில் அங்கிருந்த பல முக்கிய ஆவணங்கள் அபகரித்து செல்லப்பட்டு இருந்தது.
.
முதலில் இது கொள்ளை நோக்கம் கொண்ட தாக்குதல் என்று கருதப்பட்டாலும், பின்னர் இந்த தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது என்று அறியப்பட்டது. இந்த தாக்குதல் Adrian Hong Chang என்பவரின் தலைமையில் இயங்கும் Free Joseon என்ற இயக்கதால் செய்யப்பட்டு இருந்தது. Adrian Hong Chang என்ற முன்னாள் வடகொரிய நபர் தற்போது ஒரு அமெரிக்க குடியிருப்பாளர். இவர் அமெரிக்க இராணுவத்திலும் பணியாற்றி இருந்தவர்.
.
ஸ்பெயின் அதிகாரிகள் இந்த தாக்குதலுக்கு பின்னால் CIA செயல்பட்டு இருந்திருக்கலாம் என்று கூறி இருந்தனர். சந்தேகநபர்களின் விபரங்ககளையும் வெளியிட்டு இருந்தனர். CIAயின் பின்னணியை அமெரிக்கா அதை மறுத்து இருந்தது.
.
ஆனால் Adrian Hong Chang தம்மால் அபகரிக்கப்பட்ட முக்கியமான ஆவணங்கள், FBIயின் வேண்டுகோளுக்கு இணங்க, FBI யிடம் கையளிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். FBI அது தொடர்பாக கருத்து எதையும் கூற மறுத்துவிட்டது.
.
​தாக்குதலின் பின் Adrian அமெரிக்காவுக்கு தப்பி ஓடியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. விசாரணைகளை தொடர இவரை ஸ்பெனிக்கு அனுப்புமாறு ஸ்பெயின் அரசு கேட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா அந்த வேண்டுகோளுக்கு இதுவரை பதில் கூறவில்லை.
.