ஏவுகணை அறிவிப்பு, ஹவாயில் மக்கள் கிலி

HawaiiAlert

இன்று சனி அதிகாலை 8:07 மணிக்கு தொலைபேசிகளுக்கு விடப்பட்ட ஏவுகணை வருகிறது என்ற அவசரகால அறிவிப்பு (alert) காரணமாக ஹவாய் (Hawaii) மக்கள் கிலிகொண்டு பாதுகாப்புக்கு ஓடியுள்ளனர். குறிப்பாக இந்த செய்தி ஒரு பயிற்சி அல்ல என்றும் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
.
“Emergency Alert: BALLISTIC MISSILE THREAT INBOUND TO HAWAII. SEEK IMMEDIATE SHELTER. THIS IS NOT A DRILL” என்றே அந்த தொலைபேசி அறிவிப்பு இருந்துள்ளது.
.
இந்த அறிவிப்பு வெளிவந்து 38 நிமிடங்களின் பின்னரே அச்செய்தி பொய்யானது (false alarm) என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
.
ஏன் இவ்வாறு ஒரு பொய்யான அவசரகால அறிவிப்பு விடப்பட்டது என்றும், ஏன் அதை திருத்த 38 நிமிடங்கள் எடுத்தது என்றும் பாதிக்கப்பட்டோர் வினாவி உள்ளனர். விசாகரணைகள் மூலம் இந்த கேள்விகளுக்கு பதில் காண்பேன் என்றுள்ளார் ஹவாய் ஆளுநர் David I. Ige.
.