அமெரிக்க, இந்திய, ஜப்பானிய இராணுவங்கள் இணைந்து செய்யும் இராணுவ பயிற்சியான Malabar 2017 தற்போது வங்காள விரிகுடாவில் நடைபெற்று வருகிறது. இம்முறை மூன்று நாடுகளின் மிக பெரிய யுத்த கப்பல்கள் இந்த Malabar 2017இல் பங்கு கொள்கின்றன.
.
.
அணுசக்தியில் இயங்கும் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான Nimitz, ரஷ்யாவின் தயாரிப்பான இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் விக்கிரமாதித்தய, ஜப்பானின் Izumo ஆகிய யுத்த கப்பல்கள் உட்பட 17 கப்பல்கள், நீர்மூழ்கிகள் என்பன இந்த ஒத்திகையில் பங்கு கொள்கின்றன. இம்முறை ஒத்திகையில் எவ்வாறு எதிரியின் நீர்மூழ்கிகளை தாக்கி அழிப்பது என்ற கருத்தே முதன்மையாக இருக்குமாம்.
.
.
முற்காலங்களில் ஆஸ்திரேலியாவும் Malabar ஒத்திகைகளில் பங்கு கொண்டிருந்தாலும் சீனாவின் அழுத்தங்களின் பின் ஆஸ்திரேலியா Malabar ஒத்திகைகளில் பங்கு கொள்வதை தவிர்த்து வருகிறது.
.
ஜூலை 7 ஆம் திகதி முதல் ஜூலை 17 ஆம் திகதிவரை இந்த ஒத்திகை இடம்பெறும்.
.