லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று செவ்வாய்க்கிழமை பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. அங்குள்ள துறைமுக பகுதியில் இடம்பெற்ற இந்த வெடிப்புக்கு துறைமுக பகுதி பாரிய சேதத்துக்குள்ளாகியது. குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளதாகவும், 2,700 குக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெடிப்புக்கான உண்மையான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சில உள்ளூர் செய்திகள் வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெடிபொருள் களஞ்சியம் இருந்ததாகவும் கூறுகின்றன. இவை கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் என்கிறார் மேஜர் ஜெனரல் Abbas Ibrahim.
முதலில் ஒரு வெடிப்பு இடம்பெற்றதாகவும், அதை தொடர்ந்து அவ்விடத்தில் இன்னோர் பாரிய வெடிப்பு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 10 km தொலைவில் உள்ள வீடுகளும் இந்த வெடிப்பின் தாக்கத்துக்கு உள்ளாகின. அதுமட்டுமன்றி சுமார் 240 km தொலைவில் உள்ள சைப்பிரஸ் (Cyprus) தீவிலும் இந்த வெடிப்பால் வீட்டு கண்ணாடிகள் உடைந்து இருந்தனவாம்.
லெபனான் செஞ்சிலுவை சங்கம் இரத்ததானத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.