லெபனானில் பெருமளவு pager எனப்படும் தொலைத்தொடர்பு சாதனங்கள் செவ்வாய் ஒரே நேரத்தில் வெடித்து 8 வயது சிறுமி உட்பட 9 பேர் பலியாகியும், 2,800 பேர் காயமடைந்தும் உள்ளனர். இது இஸ்ரேலின் சதி என்றே கூறப்படுகிறது.
Gold Apollo என்ற நிறுவனத்தின் பெயரில் ஐரோப்பிய நிறுவனம் ஒன்று தைவானில் தயாரித்த Gold Apollo AR924 வகை pager களே இவ்வாறு வெடித்து உள்ளன. இந்த pager ஒவ்வொன்றிலும் வெடிமருந்து மின் கலத்துக்கு அருகில் வைக்கப்பட்டு, உள்வரும் குறுந்தகவல் மூலம் வெடிக்க வைக்கும் வல்லமையையும் கொண்டிருந்தது.
முதலில் பெயர் குறிப்பிடப்படாத மேற்படி ஐரோப்பிய நிறுவனம் தாய்வானின் Gold Apollo நிறுவனத்தின் pager களை கொள்வனவு செய்து, பின் தமது சொந்த தயாரிப்பை Gold Apollo பெயரில் தயாரிக்க உரிமை பெற்று, வெடிக்கும் pager களை தயாரித்து உள்ளது.
இந்த pager கள் பலவற்றை லெபனானின் ஹிஸ்புள்ளா ஆயுத குழு பெருமளவில் கொள்வனவு செய்திருந்தது. அதனால் ஹிஸ்புள்ளா உறுப்பினர்களும் பாதிப்படைந்து உள்ளனர்.