திங்கள் முதல் லிபியாவில் யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்யவுள்ளதாக எகிப்தின் சர்வாதிகாரி சிசி (Sissi) இன்று சனிக்கிழமை அறிவித்து உள்ளார். எகிப்த் ஆதரவு வழங்கும் Libyan National Army (LNA) என்ற லிபியாவின் கிழக்கை தளமாக கொண்ட ஆயுத குழுவு அண்மை காலங்களில் பாரிய தோல்விகளை அடைந்து வரும் நிலையிலேயே யுத்த நிறுத்தத்தை எகிப்த் நாடுகிறது.
.
எகிப்த், UAE, ரஷ்யா ஆகிய நாடுகளின் உதவியுடன் லிபியாவின் பல பகுதிகளை கைப்பற்றி வந்த Khalifa Haftar என்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் தலைமையிலான LNA, கடந்த சில தினங்களாக பரந்த அளவிலான தோல்விகளை சந்தித்து வருகிறது. ஐ. நா. வின் அங்கீகாரம் கொண்ட, துருக்கியின் ஆதரவுடன் இயங்கும் Government of National Accoird (GNA) அணி Sirte என்ற நகரங்களையும் தமது கடுப்பாட்டுள் எடுத்துள்ளது.
.
LNA விடுத்த இந்த திடீர் யுத்த நிறுத்தத்துக்கு GNA இதுவரை ஆதரவை தெரிவித்து இருக்கவில்லை. LNA யின் திடீர் யுத்த நிறுத்தம் தம்மை மீள கட்டியெழுப்ப காலம் கடத்தும் நோக்கம் என்று GNA கருதலாம்.
.
NATO முன்னாள் சர்வாதிகாரி கடாபியை விரட்டி, படுகொலை செய்தபின் அங்கு இதுவரை ஒரு நிலையான ஆட்சி அமையவில்லை. NATO அணியும் கைவிட்டு சென்றுள்ளது.
.