லிபியாவில் துருக்கி கை ஓங்க, UAE கை சரிகிறது

Libya

பெரும்பாலான உள்நாட்டு யுத்தங்களில் வெளிநாடுகளின் பலத்த பங்களிப்பு இருக்கும். தற்போது லிபியாவில் இடம்பெறும் யுத்தமும் அவ்வகையினதே.
.
ஒபாமா தலைமையிலான அமெரிக்காவும், ஏனைய NATO நாடுகளும் கூட்டாக இணைந்து லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியை பதவியில் இருந்து விரட்டி, பின் படுகொலையும் செய்தனர். அதன் பின் லிபியா ஒரு நிதானமான அரசு இன்றி யுத்தங்களுள் மாண்டு உள்ளது.
.
அண்மைக்காலங்களில் UAE, ரஷ்ய அரசுகளின் ஆதரவுடன் Libyan National Army (LNA) என்ற தனியார் படையை கொண்டிருக்கும் Haftar என்பவர் கிழக்கே இருந்து லிபியாவின் தலைநகர் நோக்கி நகர்ந்து பல பகுதிகளை கைப்பற்றி வந்திருந்தார். பணக்கார UAE யின் ஆதரவுடன் இயங்கும் LNA படைகளை முறியடிக்க முடியாத Government of National Accord (GNA) பெரும் நிலங்களை இழந்து வந்திருந்தது.
.
தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்த GNA துருகியுடன் இராணுவ உடன்படிக்கை ஒன்றை செய்து அதன் மூலம் உதவிகளை நாடியது. துருக்கியின் புதிய ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியன GNA படையின் கையை தற்போது ஓங்க வைத்துள்ளது. அதனால் முன்னர் இழந்த பல இடங்களை மீண்டும் கைக்கொண்டு வருகிறது GNA.
.
இந்த யுத்தம் லிபியாவில் இடம்பெற்றாலும், தற்போது துருக்கிக்கு, UAE க்கும் இடையிலான ஒரு மறைமுக யுத்தமாக மாறி உள்ளது.
.
ஐ.நா. 2015 ஆம் ஆண்டில் இருந்து சட்டப்படி GNA ஆட்சியையே ஏற்றுக்கொண்டு இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியமும் LNA படைக்கு ஆதரவு வழங்கி வருகிறது.
.