பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Heathrow விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை முற்றாக மூடப்பட்டு உள்ளது. இந்த விமான நிலையத்துக்கு அருகில் உள்ள substation மின்மாற்றி ஒன்றில் தீ பற்றிக்கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. மின்மாற்றி ஏன் தீ பற்றியது என்பது இதுவரை அறியப்படவில்லை.
இதனால் லண்டன் Heathrow செல்லும் மற்றும் அங்கிருந்து செல்லும் சுமார் 1,350 விமான சேவைகள் இன்று வெள்ளி தடைபட்டு உள்ளன.
Heathrow விமான நிலையத்துக்கு அருகில் உள்ள North Hayes என்ற இடத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் சுமார் 16,000 வீடுகளும் மின்சார சேவை தடைப்பட்டு உள்ளன.
தூர இடங்களில் இருந்து லண்டன் சென்ற பல விமானங்கள் ஐரோப்பாவின் வேறு நகரங்களுக்கு திசை மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. சில தமது நகரங்களுக்கு திரும்பி சென்றுள்ளன.
Heathrow விமான நிலையம் இவ்வகை இடர் ஒன்றில் இருந்து தப்பிக்க ஒரு இரண்டாம் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்று தெரிகிறது.
தற்போதைய அறிவிப்பின்படி Heathrow விமான நிலையத்தின் 5 terminal களும் மார்ச் 21ம் திகதி வெள்ளி இரவு 11:59 வரை மூடப்பட்டு இருக்கும்.