ராஜபக்ச குடும்பத்திடம் $1 டிரில்லியன் இல்லை

ராஜபக்ச குடும்பத்திடம் $1 டிரில்லியன் இல்லை

Facebook பொய்களின் தளம். மனிதரை மடையார் ஆக்கும் வல்லமை கொண்டது Facebook. ராஜபக்ச குடும்பம் இலங்கை மக்கள் பணத்தை அபகரித்ததை அறிய மக்கள் ஆவலாக உள்ள காலத்தில் சில விசமிகள் சூடான பொய் செய்திகளை பரப்பி கூதல் காய்கிறார்கள்.

தம்மை ‘anonymous hackers’ என்று கூறும் பொய் செய்தி புனைவோர் ராஜபக்ச குடும்ப சொத்துக்கள் என்று கூறி ஒரு பட்டியலை தயாரித்து உள்ளார்கள். அதில் சில ஏற்கனவே வேறு செய்திகளில் புகைப்படம் போன்ற சில ஆதரங்களுடன் வந்தன. ஆனால் சில அப்பட்டமான பொய்கள்.

மேற்படி செய்தி ராஜபக்ச குடும்பத்திடம் $1 டிரில்லியன் உள்ளதாக கூறுகிறது. அதவாது $1,000 பில்லியன் உள்ளதாக கூறுகிறது. அந்த அளவு பணம் உலகில் எவரிடமும் இல்லை. உலகின் முதல் பணக்காரரான Elon Musk கிடம் $265 பில்லியன் மட்டுமே உள்ளது. அதுவும் என்றைக்குமே காசை காணாத Tesla பங்கில் உள்ள paper  சொத்து.

அத்துடன் இலங்கைக்கு என்றைக்குமே $1 டிரில்லியன் கிடைத்ததில்லை. உள்ள கடன் $50 பில்லியன் என்றால் எங்கிருந்து வந்தது $1,000 பில்லியன்? இலங்கையில் இருந்து எவ்வாறு $1 டிரில்லியன் திருட முடியும்?

மேற்படி செய்தியில் உள்ள பொய்கள் சில வருமாறு:

“Taiwan Semiconductor Manufacturing Company, Limited – Owned by Yoshitha Rajapaksa. There are $ 40 billion worth of shares.” என்கிறது செய்தி. TSMC பங்கு சந்தை (NYSE: TSM, TWSE: 2330) மூலம் முதலீடு பெறும் உலகின் பெரிய semiconductor நிறுவனம். இதன் மொத்த சொத்து (equity) சுமார் $52 பில்லியன் மட்டுமே. அதில் $40 பில்லியன் Yoshitha வுக்கு எப்படி உரிமையாகும்? அது ஒரு கனவு மட்டுமே. (https://www.tsmc.com/english)

“Nipuna Ranawaka buys $ 70 million stake in US-based Internet giant Starlink.” என்கிறது செய்தி. Starlink நிறுவனம் Elon Musk கின் SpaceX நிறுவனத்துக்கு சொந்தமானது. இதற்கு நேரடி முதலீடுகள் இல்லை. (https://www.starlink.com)

“30% of the Dallas Cowboys team in the United States – a world-famous baseball team. Pushpa Rajapaksa owns $ 2 billion worth of shares.” என்கிறது செய்தி. Dallas Cowboy என்ற அமெரிக்க football (நமது கால்பந்தாட்டம் அல்ல) நிறுவனத்தின் முழு உரிமையாளர் Jerry Jones. (https://www.dallascowboys.com)

“Shenyang Gotiar Aircraft Manufacturing Co. Ltd – a Chinese operating company. The co-owner is Mahinda Rajapaksa, valued at $ 20 billion.” என்கிறது செய்தி. இந்த நிறுவனம் 2005ம் ஆண்டு 8 மில்லியன் சீன RMB முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டது என்கிறது நிறுவதின் பதிவு, அதாவது சுமார் $1.23 மில்லியன் முதலீடு. அது எப்படி $20,000 மில்லியன் ஆகியிருக்கும். (http://www.gotiar.com/AboutUs)

பொய்களை பெற மக்கள் உள்ளவரை பொய்யர்கள் தொடர்ந்தும் பொய் பரப்புவர். அத்துடன் இவர்கள் மில்லியனுக்கும், பில்லியனுக்கும், ட்ரில்லியனுக்கும் இடையே குழம்பி உள்ளனர் போல் உள்ளது.

(1 டிரில்லியன் = 1,000 பில்லியன் = 1,000,000 மில்லியன்)


Update 1: