இன்று வியாழன் இந்திய கீழ் நீதிமன்றம் ஒன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 2019ம் ஆண்டு ராகுல் காந்தி மோதிகளை திருடர் என்று அழைத்ததே ராகுலின் குற்றம். ராகுல் தீர்ப்பை அப்பீல் செய்யவுள்ளார்.
இந்த வழக்கு மோதியின் மாநிலமான குயாரத்தில், பா.ஜ. கட்சி உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டு குயாராத் மாநிலத்து Surat நகர் நீதிமன்றமே விசாரித்து இருந்தது.
2024ம் ஆண்டு இந்தியாவில் பொது தேர்தல் நிகழவுள்ள காலத்தில் இந்த தீர்ப்பு தேர்தலில் பிரதான அங்கம் கொண்டிருக்கும். இந்திய அரசு 2024இல் ராகுல், வயது 52, போட்டியிடுவதை தடையும் செய்யலாம்.
2019ம் ஆண்டு தனது பேச்சில் ராகுல் “Why do all these thieves have Modi as their surname? Nirav Modi, Lalit Modi, Narendra Modi.” என்று கூறியிருந்தார். மோதி என்ற ‘சமூகத்தை’ அவதூறு செய்ததே குற்றம் என்கிறது நீதிமன்றம்.
Nirav Modi என்பவர் வைர வியாபாரம் மூலம் திருட்டு செய்தார் என்று இந்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது. Nirav தற்போது மேற்கு நாடொன்றில் வாழ்கிறார்.