ரஷ்யாவுக்கு எதிரான நாடுகள் தாம் கொள்வனவு செய்யும் ரஷ்ய எரிவாயுவை ரஷ்யாவின் நாணயமான ரூபெல் (Ruble) மூலமே கொள்வனவு செய்யலாம் என்று ரஷ்ய சனாதிபதி பூட்டின் இன்று கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, ஜப்பான், நோர்வே ஆகியன எதிரி நாடுகள் பட்டியலில் அடங்கும்.
ரஷ்யா யுகிரைனை தாக்க ஆரம்பித்த பின் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பாரிய தடைகளை விதிக்க ஆரம்பித்தன. அதனால் ரஷ்ய நாணயத்தின் பெறுமதி வெகுவாக வீழ்ச்சி அடைந்தது.
வீழ்ச்சி அடைந்த தனது நாணய பெறுமதியை மீண்டும் உயர்த்தும் நோக்கிலேயே பூட்டின் இந்த திடீர் அறிவிப்பை செய்து உள்ளார்.
ஏற்கனவே இணங்கிய விலைக்கு இணங்கிய அளவு எரிபொருளை தொடர்ந்தும் விற்பனை செய்யவுள்ளதாகவும், கட்டனம் மட்டுமே ரஷ்ய நாணயத்தில் செலுத்தப்படல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஜெர்மனி கொள்வனவு செய்த ரஷ்ய எரிவாயுவின் 58% கட்டணத்தை ஐரோப்பிய நாணயமான euro மூலமே செலுத்தி இருந்து.
இந்த அறிவிப்பு எதிர்பார்த்தபடி ரஷ்ய நாணயம் சிறுது பலம் அடைந்து உள்ளது.